நடுவில் நிறுத்தப்பட்டு விட்டது என்று பலராலும் வதந்தி பரப்பப்பட்ட ‘மோகினி’ என்ற படம், தட்டு தடுமாறி வளர்ந்து நிற்கிறது. படத்தில் த்ரிஷாதான் மெயின் ஹீரோயின். கதையும் அவரை சுற்றி சுற்றிதான். நிஜத்தில் எப்பவோ நின்று போயிருக்க வேண்டிய படம். த்ரிஷாவின் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகதான் வளர்ந்தது.
மளமளவென தன் செல்வாக்கை ஏற்றிக் கொண்டிருக்கும் நயன்தாராவை மட்டுமே தொழில் போட்டியாக நினைத்த த்ரிஷா, ‘முதல்ல படத்தை முடிச்சு வியாபாரம் பண்ணிட்டு அப்புறமா சம்பளம் கொடுங்க’ என்றாராம். அதற்கப்புறம்தான் படத்திற்கு உயிரே வந்திருக்கிறது.
யெஸ்... இப்போதென்ன நிலை? பிரமோஷனுக்காக தன் பங்கிலிருந்து ஒரு பெரும் தொகையை செலவு செய்ய முன் வந்திருக்கிறாராம். இந்த சாதுர்யம் இல்லேன்னா என்னைக்கோ அண்ணி அக்கா வேஷத்துக்கு தள்ளியிருக்குமே காலம்?
Tuesday, January 2, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment