ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜான்கி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார். மூசாபேட்டை பகுதியில் தனது தோழியுடன் தங்கி இருந்தார்.
ஜான்கியுடன் அதே சூப்பர்மார்க்கெட்டில் ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் ஜானகியை ஒருதலையாக காதலித்து வந்து உள்ளார்.
ஆனந்த் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தினமும் ஜான்கியை வற்புறுத்தி வந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் ஜான்கி தங்கி இருந்த வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் ஜான்கி ஏற்று கொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜான்கியை சரமாறியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜான்கி அதே இடத்தில் பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். ஆனந்த் குற்றத்தை ஒப்புகொண்டு உள்ளார்.
Thursday, January 11, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment