இலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநல அரசியலுக்காக ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதற்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த விடயத்தை தொலைக்காட்சி செவ்வியொன்றில் சுட்டிக்காட்டி சீமான் விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, “இலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநல அரசியலுக்காக சீமான் பயன்படுத்துகின்றார். அவருக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
இலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீமான் பயன்படுத்துகிறார்: நாமல் ராஜபக்ஷ
Monday, January 8, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment