விநியோகஸ்தர் சங்கத் தேர்தல் இத்தனை வருடங்களாக எப்படி நடந்தேதோ தெரியாது. இந்த முறை நடந்த விதமே வேறு. ஆறாக ஓடியது அத்தனையும்(?)! மோதிக் கொண்ட இருவருமே வெயிட்டான ஆட்கள்.
ஒருவர் தற்போது வரைக்கும் பதவியிலிருந்த அருள்பதி. இன்னொருவர் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக இருந்தவரும், சூர்யா கார்த்தியின் நெருங்கிய உறவினருமான ஞானவேல்ராஜா. முடிவு? செம ட்விஸ்ட். அருள்பதிக்கே வெற்றி. பதவியேற்பதற்கு முன்பே, ‘ஞானவேல்ராஜா படமெல்லாம் இனிமே எப்படி வருதுன்னு பார்த்துடலாம்?’ என்கிற கோஷம்தான் ஜாஸ்தி கேட்டது. சுமார் ஆறு படங்களை தயாரிப்பில் வைத்திருக்கும் ஞானவேல்ராஜா, பொங்கலுக்கு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை வெளியிட நினைத்திருக்கிறார் என்பது அடிஷனல் தகவல். தானா வந்திருமா தல?
Tuesday, January 9, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment