Monday, January 15, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்ற போதிலும், அதன்பின்னர் நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் கொண்டது என்கிற விடயம், அவருக்கும் பொருந்தும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் 5 ஆண்டுகளைக் கொண்டதா அல்லது 6 ஆண்டுகளைக் கொண்டதா என்பது தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த உயர்நீதிமன்றம், அவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் கொண்டது என்று அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer