ஜெர்மனியில் பணியாற்றி வரும் தமிழ் பொறியாளரிடம், திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமாகி, 45 லட்சம் ரூபாய் பறித்த புதுமுக நடிகை, வாடகை பெற்றோருடன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை பெற்றோரை வைத்து இவர் ஆடிய நாடகம் அம்பலமானது. பல தமிழ் இளைஞர்கள் இவரின் அழகில் வாயைப் பிழந்து காசை கொட்டிக் கொடுத்துவிட்டு. கப்பென்று இருக்கிறார்களாம். வெளியே சொன்னால் வெட்கக் கேடு என்று. ஆனால் இந்த துணிந்த நபர் , எது நடந்தாலும் பரவாயில்லை என்று பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
சேலம் எடப்பாடியை சேர்ந்தவர் கணினி பொறியாளர் பாலமுருகன். ஜெர்மனியில் பணிபுரிந்து வரும் இவர் மேட்ரிமோனியல் மூலம் திருமணத்துக்கு பெண் தேடி உள்ளார்.அப்போது பாலமுருகனை பேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்ட இளம் பெண் தன்னை மைதிலி என்றும், கோவையில் வசிப்பதாகவும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.மேலும் அந்த இளம் பெண் பேஸ்புக் சாட்டிங்கில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி பாலமுருகனை காதல் வலையில் வீழ்த்தினார் புகைப்படங்களை கண்டு பாலமுருகனும் மைதிலியுடன் தனது தொடர்பை வலுப்படுத்தியதுடன் அவரை திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கோவை வந்த பாலமுருகன் மைதிலிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.இதனை பயன்படுத்திக்கொண்ட மைதிலி ஒரு கட்டத்தில் தனக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பதாக கூறி மருத்துவ செலவிற்கு பணம் வேண்டும் என கூறி பாலமுருகனிடம் இருந்து சிறிது சிறிதாக பணம் பெற்றுள்ளார். மைதிலியின் புற்று நோய் அறிகுறி பேச்சை நம்பிய பால முருகனும், சுமார் 45 லட்சம் ரூபாய் வரை கொடுத்து உதவியுள்ளார். இந்த நிலையில் மைதிலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே அவரது நடவடிக்கைகளை பாலமுருகன் ரகசியமாக கண்காணித்துள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட மைதிலி பாலமுருகனிடமிருந்து சிறிது சிறிதாக விலகி ஒரு கட்டத்தில் தொடர்பை முழுவதுமாக துண்டித்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த பாலமுருகன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மைதிலியின் வீட்டிற்கு விசாரணை நடத்த சென்றனர். அங்கிருந்த மைதிலியின் ஆண் நண்பர்கள் மற்றும் பெற்றோர் காவலர்களை தாக்க முற்பட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கிருந்த 5 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது மைதிலி என்ற பெயரில் பாலமுருகனுடன் பழகியவரின் உண்மையான பெயர் ஸ்ருதி பட்டேல் என்பதும் அவர் ஆடி போனா ஆவணி, சோழ வம்சம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருவதும் தெரியவந்தது.
நடிகை ஸ்ருதி பட்டேல் வி.கே.எஸ் மேட்ரி மோனியல் என்ற இணையதளம் மூலம் வசதியான ஆண்களை தொடர்பு கொண்டு அழகில் மயக்கி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதில் பல இலங்கை தமிழ் இளைஞர்களும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Sunday, January 14, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment