Saturday, January 27, 2018

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். தடை களை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

சிம்மம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் பிரச்னை தீரும். வியா பாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள் வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

விருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக் கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பிரபலங் களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி புது பொறுப்பை ஒப்படைப்பார். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer