Friday, January 26, 2018

மேஷம்: காலை 8.41 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப் பட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார் கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்: காலை 8.41 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் கேலிப் பேச்சிற்கு ஆளாவீர்கள். குடும்பத்தாரைகுறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராடவேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

கடகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். நெடுநாட்களாக நீங் கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனை கள் தருவீர்கள். சிறப்பான நாள்.

சிம்மம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமை யின் நம்பிக்கையை பெறுவீர்கள். இனிமை யான நாள்.

கன்னி: காலை 8.41 மணி வரை சந்திராஷ்டமம் தொடர் வதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

துலாம்: காலை 8.41 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடவேண்டி யிருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத் தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங் களால் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதி காரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு:  பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரபதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமை யும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer