Sunday, January 21, 2018

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

ரிஷபம்:  உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும் நம்பிக்கைக்குரியவர் களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது வாடிக்கை யாளர்கள் அறிமுகமாவார்கள். சாதிக்கும் நாள்.

கடகம்: இரவு 10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். புது முதலீடு களை தவிர்க்கவும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இரவு 10.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

கன்னி: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வீட்டை அழகுப் படுத்துவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் கள் யார் என்பதை கண்டறி வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக் கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள் வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். முகப்பொலிவு கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக் கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

கும்பம்: இரவு 10.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உறவினர்களால் சங்கடங்கள் வரும். யாருக்காகவும் சாட்சி கையெழுத் திட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. இரவு 10.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer