Wednesday, January 17, 2018

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டின் பல பாகங்களிலும் 2000க்கும் மேற்பட்ட விகாரைகளை மூடிவிட்டு, 2000க்கும் மேற்பட்ட மதுபானசாலைகள் திறக்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதில் தான் பிழையைக் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“தற்போது பெண்களை மதுபான சாலைகளில் பணியாற்ற இடமளிப்பது தொடர்பில் பெரிய பிரச்சினையாகியுள்ளது. உலகின் பல நாடுகளில் போர் விமானங்களைக் கூட பெண்கள் இயக்குகின்றனர். அத்துடன், ஆண்களால் செய்ய முடிந்த எதனையும் பெண்களாலும் செய்ய முடியும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer