மேஷம்: சொன்ன சொல்லைகாப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.
மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளி யிட வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
கடகம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.
கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
துலாம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உங்க ளால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.
தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமை கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
மகரம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை யால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
மீனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மதிப்புக் கூடும் நாள்.
Wednesday, January 17, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment