Wednesday, December 20, 2017

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, உரையாற்றிக் கொண்டிருந்தபோது கண்கலங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் மற்றும் இமாச்சல்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, ‘குஜராத் மாநில தேர்தல் வெற்றி சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. யார் ஒருவரும் இது சாதாரணமாக கிடைத்துவிட்டது என்ற மாயையின் கீழ் இருந்துவிடக் கூடாது. ஒவ்வொரு முறையும் குஜராத்தில் பெரும்பான்மை தொகுதிகளோடு வெற்றிபெறும் போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்னை பாராட்டுவார். மூத்த தலைவர்கள் கேசவ்பாய் படேல் மற்றும் சங்கர் சிங் வங்கேலா ஆகியோர் இருந்திருந்தால் நமக்கு பெரும் உதவியாக இருந்திருக்கும். அவர்கள் நம்மோடு இல்லாவிட்டாலும், வெற்றி பெற்றிருக்கிறோம். என்னைப் போலவே நீங்களும் உழைத்தால்தான் வரும் தேர்தல்களில் நாம் இதேபோல் வெற்றி பெறமுடியும்’ என கலங்கிய கண்களுடன் பேசினார்.

பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது முதல்முறையாக நாடாளுமன்றத்தில் வைத்து கண்கலங்கினார். அதையடுத்து, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மணி சங்கர் ஐயர் தன்னை ‘நீச்’ என கூறியதைச் சுட்டிக் காட்டி அழுதார். தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக கண்கலங்கியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer