தமிழ் பேசும் மக்களுக்காக இனியும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்பதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
“சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நீதி கேட்டு நாம் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை.
மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதற்கு சர்வதேச அளவில் மிக மோசமான சூழல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், முதலாவது பதவிக் காலத்துடனேயே பணியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். இந்த விடயம் பெரும் அதிர்சியினையும் ஏமாற்றத்தினையும் தந்துள்ளது.” என்றுள்ளார்.
Tuesday, December 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment