Tuesday, December 26, 2017

அருவி ரிலீஸ் ஆகும்போது, இதெல்லாம் எங்கே தேறப்போகிறது என்கிற மனநிலைதான் இருந்தது தியேட்டர்காரர்களுக்கு. ஆனால், நிலைமையில் படு பயங்கர முன்னேற்றம். நகர் பகுதிகளில் நல்ல வரவேற்பு. வில்லேஜ் பகுதிகளில் நார்மலுக்கும் அதிகமான கூட்டம். தியேட்டர்களும் அதிகப்படுத்தப்படுகிற அளவுக்கு ஹேப்பி. இந்த நல்ல சூழ்நிலையில் ஏன் நங்கூரத்தை பாய்ச்சணும் என்று நினைத்திருக்கலாம்.

அருவியை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன், ‘இந்தப்படம் என்னை கிண்டல் செய்திருந்தாலும் நான் அதை பெரிதுபடுத்தவில்லை. அருவி நல்லப்படம்’ என்று வாயார புகழ்ந்துவிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பே அருவியை பார்த்த சிலர், ‘உங்களைதான் வெளுத்துருக்காய்ங்க. ஆனால் அது நல்லப்படம். எதிர்வினை ஆற்ற வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார்களாம். அதையும் சொல்லியிருக்கிறார் லட்சுமி. பாராட்டுகள் மேம்...!

0 comments :

Post a Comment

 
Toggle Footer