Friday, December 15, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களே, தேர்தல் ஒழுங்கு முறைகளை சரியாக பூர்த்தி செய்யாத நிலையில் இன்று வியாழக்கிழமை நிராகரிக்கப்பட்டுள்ளன.

எனினும், கல்முனை நகரசபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer