வீண் அலட்டல், வேலைக்கு ஆகாது என்பதை முதன் முறையாக உணர்ந்திருக்கிறார் அஜீத். கடந்த சில படங்களாகவே தன் படத்தின் தலைப்பை படம் முடிகிற வரைக்கும் கூட சொல்லாமல் இழுப்பது அவரது வாடிக்கையாக இருந்தது. ரசிகர்களுக்கு ஒரு சின்ன சுவாரஸ்யம் இருக்கட்டுமே என்று நினைத்திருக்கலாம்.
ஆனால் இப்படி அளவுக்கு அதிகமாக சஸ்பென்ஸ் வைத்து அறிவிக்கப்பட்ட விவேகம் படத்தின் கதி, அவ்வளவு நல்லபடியாக அமையவில்லை அல்லவா? இதே சிவாவுடன் மீண்டும் இணையும் புதிய படத்தின் தலைப்பை ஷுட்டிங் போவதற்கு முன்பே அறிவித்துவிட்டார்கள்.
தலைப்பு... ‘விசுவாசம்’! அழுத்தமான அண்ணன் தம்பி கதை என்கிறார்கள். இன்னும் சிலரோ இது நட்பு குறித்த கதை என்கிறார்கள். எது எப்படியோ? இந்த தலைப்பையும் வழக்கம் போல நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடாமல் பார்த்துக் கொண்ட அஜீத்திற்கு நன்றி சொல்வதுதான் முறை
Wednesday, December 6, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment