Friday, December 22, 2017

எப்படியிருந்த ஹன்சிகா இப்படியாகிட்டாரே... என்று அஞ்சுவதற்குள் சுதாரித்துக் கொண்டார் அவர். தனது சம்பள கறார் கெடுபிடியில் பல மடங்கு இறங்கி வந்துவிட்டார். அதுமட்டுமல்ல... சென்னை வந்தால் அஞ்சு ஸ்டார் ஓட்டல்தான் வேணும். அதுவும் இந்த ஓட்டல்தான் என்று அடம் பிடித்தவர், இனிமேல் அப்படியெல்லாம் முரண்டு பிடிக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல... படத்தின் பிரமோஷனுக்கு தனி பில் என்றும் அட்டகாசம் செய்தவர் அந்த விஷயத்திலும் இறங்கி வந்தாராம். அதன் விளைவுதான் அதர்வாவுடன் ஒரு படம் அமைந்திருக்கிறது. இப்படியே தொடர்ந்தா இனிப்பு. நடுவுல முறைச்சா கசப்பு. இதுதான்மா இப்போதைய சினிமா நடப்பு.

0 comments :

Post a Comment

 
Toggle Footer