இன்னும் என்னென்ன சிரமங்களை சந்திக்கப் போகிறாரோ விஷால்? ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயற்சித்தார் அல்லவா?
அந்த நிமிஷத்திலிருந்தே அரசியல் அவரை விடாமல் பற்றிக் கொண்டது. இனி அவரே நினைத்தாலும் விட்டுவிட்டு ஓட முடியாது.
இந்த நிலையில்தான் அவருக்கு பைனான்ஸ் பண்ணிய சில சினிமா பைனான்சியர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்க ஆரம்பித்திருக்கிறார்களாம். ‘இனி உங்களுக்கு ஆளுங்கட்சி குடைச்சல் கொடுத்துகிட்டேயிருக்கும். உங்களால் நிம்மதியாக படம் எடுக்க முடியுமா? எடுத்தாலும் அதை பிரச்சனையில்லாமல் ரிலீஸ் செய்ய முடியுமா? என்றெல்லாம் டவுட் இருக்கிறது. அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் எங்க பணத்தை செட்டில் பண்ணுங்க’ என்கிறார்களாம். அப்படி இவர்களை நெருக்க வைப்பதே மேலிடம்தான் என்கிறது சில தகவல்கள்.
Wednesday, December 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment