வெயிலிருக்கும்போதே வேர்த்துக் கொள், குளிர் இருக்கும் போதே போர்த்திக் கொள் என்பதிலெல்லாம் சற்றும் உடன்பாடு இல்லாதவர் போலிருக்கிறது ஸ்ருதிஹாசன்.
இல்லையென்றால் தமிழில் அவருக்கு வந்த பல வாய்ப்புகளை நிராகரித்திருப்பாரா? இப்போது அவர் பக்கம் போக ஆளில்லை. இருந்தாலும் ‘அருவி’ என்ற படத்தில் நடிக்க அநியாயத்துக்கு ‘நோ’ சொன்னாராம். ஏன்? படம் பெண் ‘டெரரிஸ்ட்’ பற்றியது. இதில் நடித்தால் ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளாவோம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அதே கேரக்டரில் அதிதி பாலன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.
படத்தையும் இன்டஸ்ட்ரியில் பாதி பேர் பார்த்துவிட்டார்கள். ‘ஸ்ருதி நடிச்சுருந்தாக்கூட ஒண்ணுமில்லாம போயிருக்கும். இப்ப பர்பெக்ட்’ என்கிறார்களாம் அவர்கள். ஆளே இல்லேன்னாலும் உங்க மேல அள்ளி வீசிட்டு போவுது விமர்சனம். ஏம்மா இப்படி ஸ்ருதி?
Wednesday, December 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment