குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.விற்கு நடுக்கத்தைத் தந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அத்தோடு, குஜராத் வளர்ச்சி என்பது வெற்று பிரச்சாரம் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி மேலும் கூறியுள்ளதாவது, “குஜராத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை திருப்தி அளித்துள்ளது. ஊழல் குற்றசாட்டுகள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை.
முடிவுகளை பார்க்கும் போது பிரதமர் மோடியின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிவிட்டது. கடந்த 3- 4 மாதங்களுக்கு முன்பு நாங்கள் குஜராத்திற்கு சென்ற போது காங்கிரஸ், பா.ஜ.க.விற்கு ஒரு போட்டியே இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் 3- 4 மாதங்களாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குஜராத்தில் கடுமையாக உழைத்தனர். அதற்கான பலனை தான் நாம் தேர்தல் முடிவுகளில் காண்கிறோம்.” என்றுள்ளார்.
Tuesday, December 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment