தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் பாவனையை தடைசெய்வதற்கும், பொலித்தீன் பாவனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்காலத்தில் ஊடக கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்து உரிய தரப்பினரை அறிவுறுத்துமாறும் ஜனாதிபதி மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் கழிவு முகாமைத்துவத்தினை முறைப்படுத்தல் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதனை எந்த வகையிலும் தாமதிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, பிரச்சினைகள் காணப்படுமாயின் துரிதமாக அவற்றை தமக்கு முன்வைக்குமாறும் உரிய துறையினருக்கு பணித்துள்ளார்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை முகாமை செய்தல் பற்றிய அமைச்சரவைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
Friday, December 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment