Sunday, December 24, 2017

“ஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை. அதில் பதிவானதும் வாக்குகளே இல்லை.” என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி முகத்தை நோக்கி முன்னேறிவரும் நிலையில், அது தொடர்பில் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து வெளியிட்டுள்ளார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால், பணப் புழக்கம் எவ்வளவு தூரம் நடந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பா.ஜ.க. பின்தங்கியிருக்கிறதே என்று நீங்கள் கேட்பதில் எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் தமிழகமே தன்மானத்தில் பின்தங்கியிருக்கிறது. அ.தி.மு.க, திமுக பின்தங்கியிருக்கின்றன. இங்கு நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை. அதில் பதிவானதும் வாக்குகளே இல்லை. அதனால் கருத்து சொல்வதற்கும் ஒன்றுமில்லை. கடைசி நிமிடம் வரை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எங்கள் வேட்பாளர் புகார் கூறினார். ரூ.20 நோட்டில் பணம் தருவதாக டி.டி.வி.தினகரன் தரப்பினர் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்" என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer