Friday, December 22, 2017

நள்ளிரவு 12 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் வழக்கம் இன்று எல்லா ஹீரோக்களுக்கும் வந்துவிட்டது. அதுவரை ரசிகர்கள் விழித்திருந்து ரசிப்பது ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டும்தான். அந்த வகையில் ரஜினியின் பிறந்த நாள் சிறப்பு பரிசாக வெளியிடப்பட்ட காலா செகன்ட் லுக் எப்படி? இதற்கு முன் காலா ஷுட்டிங்கின் போது கசிந்த பல படங்களின் இன்னொரு வடிவம்தான் இது.

இதற்காகவா இரவெல்லாம் கண் விழித்து காத்திருந்தோம் என்று ரசிகர்கள் சங்கடமானது தனி கதை. அதுபோகட்டும்... இரவு 12 மணிக்கு வந்த காலா செகன்ட் லுக்கை அதற்குள் போஸ்டராக அடித்து காலையில் ரஜினி வீட்டு வாசலில் தாங்கிப் பிடித்தபடி நின்ற அவரது ரசிகர்களை குறைத்து மதிப்பிட முடியாது. தலைவர் வழக்கம் போல கேளம்பாக்கத்தில் இருந்துவிட்டார். போயஸ் கார்டனில் கூடிய கூட்ட விபரம் மட்டும் அவர் காதுகளுக்கு போனது! (போயஸ் கார்டன் வீட்டுக்காவது வரவேண்டிய நேரத்தில் வாங்க சார்)

0 comments :

Post a Comment

 
Toggle Footer