குஜராத் முதல்வராக விஜய் ரூபானி இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டார். விஜய் ரூபானிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குஜராத்தில் இரண்டாவது முறையாக விஜய் ரூபானி முதல்வரானார். அதேபோல் துணை முதல்வராக நிதின் படேல் பதவி ஏற்றார். அவருடன் 19 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
குஜராத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அத்தோடு, பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. மற்றும் கூட்டணியைச் சேர்ந்த 18 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
Tuesday, December 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment