“தமிழ் மக்கள் அரசியல் மாற்றமொன்றை விரும்புகின்றார்கள். எனவே, அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக வந்தால் நான் கட்சித் தலைமையையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கின்றேன்.” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த முறை தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும். இன்றும் காலங்கடந்து விடவில்லை. மாறுபட்டு தேர்தல் கேட்கின்றவர்கள் ஒன்றாக வந்தால் நான் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார். தெரியாத ஊருக்கு பாதை காட்டுவதனை விடுத்து தெரிந்த ஊருக்கு பாதை காட்டுவோம் எல்லோரும் வாருங்கள்.” என்றுள்ளார்.
Friday, December 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment