இன்று வெள்ளிக்கிழமை ஜப்பான் அரசு அறிவித்த அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புப் பட்ஜெட் வரலாறு காணாத வகையில் சுமார் 5.19 டிரில்லியன் யென் ($46 பில்லியன் டாலர்) ஆக உயர்ந்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான மொத்த அரச பட்ஜெட்டாக 97.71 டிரில்லியன் அதாவது 862 பில்லியன் டாலர் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் பாதுகாப்புக்காக ஒதுக்கப் பட்ட பட்ஜெட் ஆனது வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக் கூடிய வகையில் அதிநவீன ஏவுகணைத் திட்டங்களை உருவாக்கவென்றே பெரிதும் ஒதுக்கப் பட்டுள்ளது.
மேலும் தென் சீனக் கடலில் அதிகரித்துள்ள சீனாவின் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பதிலடியாகவும் இந்த பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டுள்ளது. மறுபுறம் ஜப்பானில் பிறப்பு சதவிகிதம் வெகுவாகக் குறைந்துள்ளதாக அண்மைய கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4% வீத பிறப்பு குறைந்துள்ளதாகவும் இறப்பு சதவீதம் 3% வீதமாக அதிகரிக்கவுள்ளதாகவும் அக்கணிப்புக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
Saturday, December 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment