Monday, December 4, 2017

தான் வெல்லாவிட்டாலும் பரவாயில்லை, தனது அணி (அதிமுக) தோற்க்கவேண்டும் என்பதில் குறியாக உள்ள தினகரன். நடிகர் விஷாலை ஆ.கே நகரில் களமிறக்கியுள்ளார். ஆதி தெலுங்கு மக்கள் அதிகமுள்ள, ஆர்.கே. நகரில், நடிகர் விஷாலை தெலுங்கில் பேச வைத்து, ஓட்டுகளைப் பிரித்தால் அ.தி.மு.க. தோற்கும். தி.மு.க எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்ற கணக்கை, தினகரன் போட்டு வைத்துள்ளார். இவர் போட்டுள்ள கணக்கு என்னமோ ... ஆனால் இதில் ஈழத் தமிழர்களுக்கு என்ன நடக்கும் என்றால் ... அங்கே தான் மேட்டர் ஒளிந்துள்ளது...

அது ஒரு வகையில் உண்மையே. மத்திய அரசு அதிமுக பன்னீர் செவம் அணிக்கு பல உதவிகளை வழங்கி வரும் நிலையில். ஜெயலலிதாவின் செல்வாக்கை பலமிழக்க செய்ய ஒரு கூட்டம் சத்திவாய்ந்த பிரச்சாரங்களில் இறங்கியுள்ளது. இதில் ஒன்று, ஜெயலலிதா இறந்த விடையம், மற்றது சொத்து குவிப்பு விடையம். மேலும் இதற்கு எல்லாம் மகுடம் வைத்தது போல ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்று கூறி. அதே சாயலில் ஒரு பெங்களூர் பெண்ணை களம் இறக்கியுள்ளார்கள். இதனால் தற்போது தமிழ் நாட்டில் அதிமுகவுக்கான ஆதரவு பலமாக குறைந்து விட்டது.

தி.மு.க வுக்கான ஆதரவு பல்கிப் பெருகி நிற்க்க. இன் நேரம் பார்த்து அண்ணன் வைகோ அவர்களும் தி.மு.காவோடு கைசேர்த்துக் கொண்டார். எனவே முதலில் ஆர்.கே நகரில் நாடி பிடித்து பார்ப்பது. அதில் வெற்றி என்றால், பின்னர் வரவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.காவோடு இணைந்து போட்டியிடுவது என்று வைகோ அவர்கள் முடிவெடுத்து பல நாட்கள் ஆகிறது. எனவே இம்முறை வைக்கோவுக்கு குறைந்தது 16 இடங்களை தி.மு.க ஒதுக்கிக் கொடுக்கும் என்கிறார்கள்.

வைகோ கட்சியான மதிமுக இம் முறை சில இடங்களில் வெற்றி பெறும். அதுபோக கலைஞர் புலிகள் மீதுள்ள வெறுப்பால் பல செயல்களை செய்தாலும். தற்போது அதன் தலைமியில் இருக்கும் தளபதி ஸ்டாலின் அவர்கள் ஈழத் தமிழர்கள் நோக்கங்கள் நிறைவேறவேண்டும் என் எண்ணுபவர். எனவே, வைக்கோ மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் கூட்டு. ஈழத் தமிழர்களுக்கும் ஒரு நல்ல விடிவை ஏற்படுத்தலாம். ஆனால் அதனை அணுகும் விதத்தில் உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer