நடிகர் உதயநிதி ஸ்டாலினின் நிமிர் படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இயக்குனர் சீனு ராமசாமியுடன் புதிய படத்தில் கூட்டணி சேர உள்ளார். ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தை தயாரித்தார் உதயநிதி ஸ்டாலின். தற்போது இவர்கள் மீண்டும் இணையவுள்ள படத்தில் இந்த முறை உதயநிதி நாயகனாக நடிக்க சீனுராமசாமி படத்தை இயக்கவிருக்கிறார்.
இப்படத்திற்கு ‘கண்ணே கலைமானே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.தர்மதுரை படத்தில் தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தவர் சீனுராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளராக ஜலந்தர் என்பவர் அறிமுகமாகிறார்.இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் இணையவுள்ளதாகவும் உதயநிதி விவசாயி ஆக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கி வரும் சீனுராமசாமி இந்த படத்தை 2018 ஜனவரி 19ல் தொடங்கவிருக்கிறார்.
Wednesday, December 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment