Tuesday, December 19, 2017

சமீபத்தில் திரைக்கு வந்த ‘அருவி’ படத்தை ஒட்டுமொத்த மீடியாவும் கொண்டாடித் தீர்த்துவிட்டது. நாயகி அதிதி பாலனுக்கு நாள்தோறும் குவிகிறது பாராட்டுகள்.

கொஞ்சம் கைதூக்கிவிட்டால் படம் பிய்ச்சுக்கும் என்கிற நிலைமை. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, துளி கூட அசைந்து கொடுக்க மறுக்கிறாராம். ஏன்? “இப்படிதான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கும் கன்னாபின்னான்னு பப்ளிசிடி பண்ணினேன். மீடியா பாராட்டுன அளவுக்கு மக்கள்ட்ட எழுச்சியில்ல. அப்படியிருக்கும்போது எதை நம்பி இந்த அருவிக்கு செலவு பண்ணுறது? தானா ஓடுனா ஓடட்டும். நாமளா புடிச்சு தள்றதுன்னா அது அப்படியே கிடக்கட்டும்” என்று கூறிவிட்டாராம். கொட்ற அருவியை கூடையில பிடிக்கிற கும்பல்னு தெரியாம போய் மாட்டிக்கிட்டீங்களே டைரக்டர்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer