Wednesday, December 27, 2017

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் புன்னகை இளவரசி சினேகாவுக்கு முக்கியமான ரோல் இருக்கிறது. ஆனால் படத்தில் புன்னகை அரசியாக வருகிறாரா என்றால் அதுதான் இல்லையாம். விளம்பரங்களை நம்பி அவர் ஒரு பொருளை வாங்கி உபயோகப்படுத்த... அதனால் அவரும் அவரது குடும்பமும் படும் துயரம்தான் படத்தின் மெயின் லைன். ‘ரொம்ப நாள் கழிச்சு நடிக்க வர்றேன்.

அதுக்கேற்ற டெப்த் இருக்கணும்’ என்று கேட்டுக் கொண்ட சினேகாவுக்காக மெனக்கெட்டு புழிஞ்ச அழுகாச்சியாக இருக்கும் என்கிறார்கள்.

முதன் முறையாக முழு நீள சீரியஸ் ரோலில் நடிக்கிறார் சிவா. காமெடிக்குதான் ரோபோ சங்கரும், சதீஷும் இருக்கிறார்களே? (அப்படியே சிரிக்க வச்சுட்டாலும்...) பட், சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் நடிப்பில் போட்டிருக்கிற போட்டி, தியேட்டரையே பரபரக்க வைக்கும் என்கிறது படக்குழு! இந்த ஜோடி மீண்டும் ரிப்பீட் ஆகுது தெரியுமோ?

0 comments :

Post a Comment

 
Toggle Footer