பிரிட்டன், சீனா, பிரான்ஸ், துருக்கி, ஜேர்மனி, சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்ப்பை மீறி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று புதன்கிழமை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்துள்ளார்.
மேலும் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப் படும் என்றும் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டி பாலஸ்தீனத்துடன் இஸ்ரேலும் உடன்பட்டால் இரு தேசக் கொள்கைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதற்கும் என்றே இம்முடிவு என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது உலக அளவில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் உள்ள 8 நிரந்தர உறுப்பு நாடுகள் இந்த வார இறுதியில் அவசரக் கூட்டத்துக்கும் ஒழுங்கு செய்துள்ளன. மேலும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ஆகிய இருவரும் அதிபர் டிரம்பின் முடிவுக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.
யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகிய மூன்று மதத்தவருக்கும் பொதுவான மதத் தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் இவர்கள் அனைவரும் சம உரிமை கொள்ளக் கூடிய பகுதியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
Thursday, December 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment