Monday, December 4, 2017

“தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இன்னமும் கட்சியாக பதிவு செய்யப்படாமையால், நாம் இம்முறை சுயேட்சையாக போட்டியிடுவோம்.” என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் சில எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கேள்வியெழுப்பியபோதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியாக இன்னமும் பதிவு செய்யப்படாமையால், இம்முறை தேர்தலைச் சுயேட்சையாகக் களமிறங்கியே சந்திக்கவுள்ளோம். எந்தவொரு பெருங் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்படும் முடிவை நாங்கள் எடுக்கவில்லை. இது நாங்கள் சந்திக்கும் கன்னித் தேர்தல். ஆகையால், எமது பலத்தை நிரூபிக்க நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கும் எங்களை நிச்சயமாக மக்கள் ஆதரிப்பர்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer