ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை எந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற முடியாது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள மு.க.அழகிரி, இந்த செயல்தலைவர் இருக்கும் வரை திமுக ஆர்.கே.நகர் தேர்தல் மட்டுமல்ல, வேறெந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெற முடியாது. அவர் ஆக்டிவா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அவர் உடல்நலக்குறைவில் இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து காட்சி ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்த மு.க.அழகிரி, ‘அவர் ஆக்டிவாக இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், அவர் இருக்கும்வரை எதுவும் சரியாக இருக்காது; அதுமாதிரியான ஆட்களை தன்னுடன் வைத்துள்ளார் அவர். தேர்தலில் தோற்பவர்கள் சொல்வதைப் போல ஸ்டாலின் சப்பைக்கட்டு கட்டுகிறார். தேர்தலில் முறையாக வேலை செய்யவேண்டும். வேனில் ஏறி நின்று வெறும் பிரச்சாரம் செய்தால் மட்டும் போதாது. கலைஞரைப் போல களப்பணி செய்யத் தெரியவேண்டும். தினகரன் தொடக்கத்தில் இருந்தே களப்பணி செய்திருக்கிறார். அதனால்தான் அவர் வெற்றி பெற்றார். பணம் இருந்தால் மட்டும் ஒரு வேட்பாளர் ஜெயித்து விட முடியாது. திருமங்கலம் பார்மூலா என்கிறீர்கள்.. திருமங்கலத்தில் கட்சிக் காரர்கள் எப்படி உழைத்தார்கள் என்பதை நேரில் இருந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
Wednesday, December 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment