Wednesday, December 20, 2017

திருடன் போலீஸ் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தினேஷ் நடிக்க 'உள்குத்து' படத்தைத் தொடங்கினார் கார்த்திக் ராஜு. நந்திதா, திலீல் சுப்பராயன், பால சரவணன் உள்ளிட்ட பலர் தினேஷுடன் நடித்துள்ளார்கள்.பிரமோத் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதையை பற்றி இயக்குநர் கார்த்திக்ராஜு பேசுகையில்....

"எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் மீன் சந்தை ஒன்று உள்ளது அங்கு மீன் விற்பனை நடைபெறும் அதன் அருகில் சின்ன பசங்க அந்த மீனை வெட்டி கிலோக்கு 20 ரூபாய் என சுத்தம் செய்து கொடுப்பார்கள். அதை நான் ரொம்ப நாளாவே கவனித்து வந்தேன். மீன் சந்தையில் புதன், சனி, ஞாயிறு மட்டுமே வேலை இருக்கும் மற்ற நாள்களில் அந்த சிறுவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன் அப்போது தோன்றியது தான் இந்த கதை. அவர்களை சார்ந்த கதையை  எழுதலாம் என்று முடிவுசெய்தேன் அது தான் இந்த உள்குத்து.

மேலும் அந்த  சந்தையில் மீன் விற்பர்களிடம் தகவல்களை சேகரித்தேன். அதுவும் மிக சுவாரசியமாக இருந்தது. மீனவர்களுக்கு மீன் வாங்க கையில் காசு இருக்காதாம் . பின்னர் காலையில் மீனவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் ஒரு லட்சத்தில் பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு மீதமுள்ள தொன்னுராயிரம் ரூபாய் பணத்தை மட்டுமே கையில் தருவார்கள். மாலையில் ஒரு லட்சம் ரூபாயாக மீனவர்கள் கடன் கொடுப்பவர்களிடம் கொடுக்கவேண்டும் என்ற விஷயத்தை என்னிடம் கூறினார்கள். நான் அவர்களிடம் மீன் விற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர்கள் மீனை நாங்கள் ஐஸ் பாக்ஸில் போட்டு விடுவோம் மறுநாள் விற்பனை செய்வோம் என்றார்கள்.

ஆனால் அன்று ஐந்தாயிரம் ரூபாய்க்கு மட்டும் விற்று இருந்தால் எங்கள் பாடு திண்டாட்டம் தான் அடி, உதை கூட சமயத்தில் விழும் எங்களால் எதுவுமே செய்ய முடியாது ஏன்னென்றால் மீண்டும் நாங்கள் அவர்களிடம் தான் எங்கள் தேவைக்கு பணம் வாங்க வேண்டியிருக்கும் அது கந்து வட்டியா இருக்குமோ என்று கூட எங்களுக்கு சொல்ல தெரியவில்லை என்றார்கள். அதே போல் அந்த பசங்களும் சில விஷயத்தை என்னிடம்  சொன்னார்கள் நான் மீன் வெட்டுகிறேன் ஒரு கிலோக்கு 20 ரூபாய் கிடைக்கிறது ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு மணி நேரத்தில் இருபது முதல் இருப்பத்தைந்து கிலோ வரை மீனை வெட்டுவேன் அதன் பின் எனக்கு எந்த வேலையும் இல்லை என்றான் அந்த சிறுவன். பசங்களுக்கு வேலை இல்லாத நேரத்தில் இவர்களை யாரவது தவறா பயன்படுத்தினால் என்ன ஆகும் மற்றும் பசங்களை மையப்படுத்தி ஒரு ரவுடிதனத்தை உட்புகுத்தி கதை தயார் செய்திருக்கிறேன்" என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer