ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முதலிரவு அன்று கட்டிய மனைவியை பிளேடால் அறுத்த கொடூர கணவனை கைது செய்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
சித்தூரை சேர்ந்த ஆசிரியர் ராஜேஷ_க்கும், அதே பகுதியை சேர்ந்த வைத்தியர் சைலஜாவுக்கும் சமீபத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.
திருமண தினத்தன்று பல்வேறு கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் சென்ற சைலஜா சிறிது நேரத்தில் அலறியடித்து கொண்டு வெளியே வந்தார். இதனால் பெண் வீட்டார் குழப்பம் அடைந்தாலும் பின்னர் சைலஜாவை சமாதானப்படுத்தி முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் மீண்டும் சில நிமிடங்களில் கையில் இரத்தக்காயங்களுடன் அலறியபடி வெளியே வந்த சைலஜா திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்வீட்டார் சைலஜாவை வைத்தியசாலையில் சேர்த்தனர். முதலிரவில் மனைவி சைலஜாவை பிளேடால் பல இடங்களில் கணவன் ராஜேஷ் அறுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன்பின்னர் ராஜேஷை கைது செய்த பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த திருமணத்திற்காக பெண் வீட்டார் சுமார் ரூ.60 லட்சம் செலவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, December 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment