ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டு வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
33 வருடங்களாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரது சுக துக்கங்களில் பங்கெடுத்த சசிகலாவை கொலைகாரி என்றும், அம்மாவின் கையை எடுத்துவிட்டார், காலை எடுத்தார்கள் என்றும் பலர் பேசினார்கள். கொலைகாரி என்ற பழி வந்தபோதுகூட அம்மாவின் கண்ணியத்துக்கு இழுக்கு வரும் என்பதற்காக இந்த வீடியோவை அவர் வெளியிடவில்லை.
தற்போது அதனை அவமதிக்கும் வகையில் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டுள்ளார். சசிகலா அனுமதி இல்லாமல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரிரு மாதங்களில் வீடியோ எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பின்னால் இருக்கும் கருவிகளை அவரால் திரும்பி பார்க்க முடியாததால் அவர் வீடியோ எடுக்கும்படி கூறினார். ஜெயலலிதா கூறியதன் பேரில் சசிகலா தான் வீடியோவை எடுத்தார்.
விசாரணைக் கமிஷன் கேட்டால் கொடுப்பதற்காக அந்த வீடியோவை டிடிவி தினகரனிடம் சசிகலா வழங்கியிருந்தார். அவரிடம் இருந்த வீடியோ வெற்றிவேலுக்கு எப்படி போனது என்பது தெரியவில்லை. இனிதான் தெரியவரும். சசிகலாவின் அனுமதி இல்லாமல் இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார். இதுபற்றி தினகரனிடம் இதுவரை பேசவில்லை. ஆனால், வீடியோ வெற்றிவேலிடம் எப்படி சென்றது? என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Wednesday, December 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment