‘மெர்சல்’ படத்தை ஓட வைத்த புண்ணியம் தமிழக பி.ஜே.பி க்கு உண்டு. எங்கு கை வைத்தால் இலவச பப்ளிசிடி கிடைக்கும் என்பதையும் ஒரு தலைவலி தைலத்தோடு யோசிக்கிற அளவுக்கு விளம்பர விஷயத்தில் அக்கறை காட்டுகிறார்கள் இயக்குனர்கள்.
விரைவில் வெளிவரப்போகிற விஜய்சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படம் தமிழக பி.ஜே.பி க்கு வேலை வைக்கிற படமாக இருக்கும் போலிருக்கிறது. ஏன்? படத்தில் இந்து கடவுளான ராமனை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல... பிரியாணியை அண்டாவோடு தூக்கிக் கொண்டு ஓடிய நிகழ்வையும் படத்தில் டயலாக்காக வைத்திருக்கிறார்களாம். அப்புறமென்ன? கிளம்புங்க கிளம்புங்க... படத்தை ஓட வைக்கணும்.
Friday, December 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment