ஜெயலலிதாவின் மகளை பற்றிய முழு விவரம் சசிகலாவிற்கும், நடராஜனுக்கும் தான் தெரியும் என அவரின் அண்ணன் வாசுதேவன் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூர் ஶ்ரீரங்கராஜபுரத்தில் வசிக்கும் வாசுதேவன் அளித்துள்ள பேட்டியில், நான் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனுக்கும் அவரது முதல் மனைவியான ஜெயம்மாளுக்கும் பிறந்த ஒரே மகன்.
அந்த முறையில் ஜெயலலிதா எனது தங்கையாவார். ஜெயலலிதாவின் அம்மா வேதாவும் கலை இயக்குனர் தாமோதரப்பிள்ளைக்கும் பிறந்த மகள் சைலஜா என்று மீடியாவில் வந்தது.
அதையடுத்து நான் சைலஜாவை சந்திக்க நினைத்த நிலையில் வயது முதிர்வால் முடியவில்லை. ஆனால் என்னை பற்றி அறிந்த சைலஜா குடும்பத்தோடு என்னை பார்க்க வந்திருந்த நிலையில் அவரின் குடும்ப வரலாறை என்னிடம் கூறினார். அவர் சொன்ன அனைத்தும் உண்மையாக இருந்ததால், அவர் ஜெயலலிதாவின் தங்கை என்பதை உணர்ந்தேன். அப்போது சைலஜா தன்னுடைய மகள் அமிர்தாவை என்னிடம் அறிமுகம் செய்தார். பின்னர் சைலஜா உடல் நிலை சரியில்லாமல் மரணம் அடைந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து அமிர்தாவின் தந்தை பார்த்தசாரதியும் மரணம் அடைந்தார். அப்போது எங்கள் தந்தையின் உறவினர்களான ரஜினிநாத், லலிதாவை அமிர்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
Home
»
Tamizhagam
»
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மையே: சசிகலாவுக்கு தெரியும்! அண்ணன் பரபரப்பு பேட்டி..
Saturday, December 2, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment