அண்மையில் வடகொரியா தனது அதி சக்தி வாய்ந்த கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைப் பரிசோதனை செய்திருந்தது. அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளையும் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த இந்த ஏவுகணை சோதனையை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை என்பது கால விரயம் எனவும் இராணுவ நடவடிக்கையே தகுந்த முடிவு என்றும் தெரிவித்திருந்தார்.
இதனால் போர்ப் பதற்றம் இன்னமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வடகொரிய விவகாரத்தில் இதுவரை பாரிய முடிவுகளை எடுக்காது இருந்த ரஷ்யா வடகொரியாவின் இறுதி ஏவுகணைப் பரிசோதனையின் பின்னர் அதன் மீது இராணுவத் தாக்குதல் தொடுக்கத் தயாராகி விட்டதாக அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை செயலாளர் நிகோலே பேட்ரஸ்ஹேவ் கருத்துத் தெரிவிக்கும் போது வடகொரியா விவகாரத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக அதன் மீது எடுக்கப் படவுள்ள இராணுவ நடவடிக்கை அமையும் என்று கூறியுள்ளார். ரஷ்யாவின் இந்த முடிவு உலக அளவில் அதிர்ச்சி அலைகளை அதிகரித்துள்ளதுடன் இது 3 ஆம் உலகப் போருக்கும் இட்டுச் செல்லக் கூடியது என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Sunday, December 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment