Tuesday, December 5, 2017

தற்போதைய கூட்டு அரசாங்கம் ஏழை மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏழை மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் அனைத்து பொருளாதார திட்டங்களையும் மேற்கொள்கிறது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினதும் சுகாதாரப் போசணை சுதேச மருத்துவ துறை அமைச்சினதும் வரவு-செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer