Saturday, December 23, 2017

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளில் உறுதியளித்த தீர்மானங்களை இலங்கை உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நத்தார் மற்றும் புதுவருட தினங்களை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரித்தானியத் தூதுவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சுமுகமான வாழ்க்கைக்குத் தேவையான ஆணையையே இலங்கை மக்கள் வழங்கியுள்ளனர். தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு ஏற்படுத்துவதாகக் கூறிய மனித உரிமை செயற்பாடுகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு சடுதியான முன்னேற்றப் பாதையை நோக்கி நகரவேண்டும்'' என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer