Sunday, December 3, 2017

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ம.தி.மு.க. ஆதரவளிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ம.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டத்திற்கு பிறகு வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க-விற்கு ம.தி.மு.க ஆதரவளிக்கும். வருங்கால தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவளிக்க மதிமுக உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திராவிட இயக்கத்தை பாதுகாக்கும் கடமை ம.தி.மு.க.வுக்கு உள்ளது. அத்தோடு, திமுக - மதிமுக நல்லிணக்கத்திற்கு இது ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer