தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முடியாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முடியாது. தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகத்தால் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு, ஆட்சியின் மீதான அதிருப்தியே காரணம். ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன் சிறந்த அரசியல்வாதி கிடையாது. டிடிவி தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது தான்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா புகார் குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிடிவி தினகரன் வெற்றியால் எந்த மாற்றமும் வந்து விடாது. தேர்தலுக்காக ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டதால், டிடிவி தினகரனுக்கு அனுதாப வாக்குகளே கிடைத்துள்ளது. இபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சியில் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tuesday, December 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment