இன்று காலை 10.25 மணி வாக்கு எண்ணும் நிலவரப்படி, குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் பா.ஜ.க. 106 இடங்களிலும், காங்கிரஸ் 74 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.
இந்த நிலை தொடர்ந்தால், குஜராத்தில் பா.ஜ.க ஆட்சியமைப்பதற்கு தேவையான 92 இடங்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும். எனினும், 2012 தேர்தலோடு ஒப்பிடும் போது, 10- 15 இடங்களை பா.ஜ.க இழந்திருக்கின்றது.
இதனிடையே, இமாச்சல் பிரதேச தேர்தலில் மொத்தமுள்ள 68 இடங்களில், பா.ஜ.க 39 இடங்களிலும், காங்கிரஸ் 29 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. எனினும், கடந்த முறை ஆட்சியமைத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு இது மிகப்பெரிய தோல்வியாக கொள்ளப்படுகின்றது.
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று திங்கட்கிழமை காலை 07.00 மணியளவில் ஆரம்பமானது.
Monday, December 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment