‘நன்நீரை கடலில் கலக்க விட்டுவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்குவது சிறந்ததல்ல. முதலில், நன்நீரைச் சேமித்து குடிநீராக பயன்படுத்த வேண்டும்’ என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய (வியாழக்கிழமை) அமர்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னாரில் பெருமளவான நன்நீர் கடலில் கலக்கின்றது. அதனை தடுத்து சேமிப்பதன் மூலம் குடிநீராக பயன்படுத்த முடியும். நிலத்தடி நீரினைப் பாதுகாப்பதற்காக குளங்கள், குட்டைகளை தூர்வார வேண்டும். எனக்கு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் எந்தவித ஆர்வமும் இல்லை.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
நன்நீரை கடலில் கலக்க விட்டுவிட்டு, கடல் நீரை நன்நீராக்குவது சிறந்ததல்ல: க.சிவநேசன்
Friday, December 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment