சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது 16 பெண்கள் பாலியல் குற்றச்சாடுக்களை முன் வைத்திருந்தனர். மேலும் இது தொடர்பில் ஒரு ஆவணப் படமும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.
ஆனால் இது தொடர்பில் இன்னமும் விசாரணை முன்னெடுக்கப் படவில்லை. பதிலாக வெள்ளை மாளிகை அறிக்கையில் இக்குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனப்பட்டுள்ளது. மேலும் டிரம்பின் தேர்தல் பிரச்சாரக் காலத்திலேயே இதற்குப் பதில் அளிக்கப் பட்டு விட்டது என்றும் அதனால் தான் மக்கள் அவரை வெற்றியடையச் செய்தனர் என்றும் தெரிவிக்கப் பட்டதுடன் இதற்குப் பாராளுமன்றத்தில் விசாரணை செய்ய முடியாது என்றும் அறிவிக்கப் பட்டது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது பாலியல் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பேற்று உடனே பதவி விலக வேண்டும் என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 54 எம்பிக்கள் வலியுறுத்தி ஒரு கடிதத்தில் கைச்சாத்திட்டு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அரச சீர்திருத்தக் குழுவுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
மறுபுறம் அமெரிக்க அலபாமா மாநில செனட்டர் தேர்தலில் சுமார் 25 ஆண்டுகளாகத் தன் வசம் வைத்திருந்த குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளதுடன் இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டக் ஜோன்ஸ் சில வாக்குகள் வித்தியாசத்தால் வெற்றியடைந்துள்ளார். இதனால் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் மேலும் கலக்கம் அடைந்துள்ளார்.
இவ்வெற்றி காரணமாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் எந்தவொரு மசோதாவையும் அதிபர் டிரம்ப் கடும் சிரமத்தின் மத்தியில் தான் நிறைவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
தீவிரமடையும் டிரம்ப் மீதான பாலியல் புகார்கள் : அலபாமா செனட் ஜனநாயகக் கட்சி வசம் சென்றது!
Thursday, December 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment