Tuesday, December 26, 2017

மெர்சல் பட விவகாரங்கள் படு ஸ்மார்ட்டாக அடங்கிவிட்டன. படத்தை வாங்கியவர்களுக்கு படு லாபம். தயாரித்தவருக்குதான் தாங்கொணா துயரம் என்கிறது இன்டஸ்ட்ரி தரும் இம்சை தகவல்கள். இன்னொரு பெரிய ஹீரோ படத்தை அறிவிக்கும் வரை மெர்சல் தயாரிப்பாளருக்கு கடன் தொல்லை இருக்கும் என்கிறார்கள். சில தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினாராம்.

ஊரையே மெர்சலாக்கிய அதே படம்தான், தயாரிப்பாளரின் உடல் நலத்தையும் மெர்சலாக்கியதாக ஊர் முழுக்க பேச்சு. விஜய்யே மனசு வைத்தால்தான் அவரால் இயல்பு நிலைக்கு வர முடியும். ஆனால் பட்ஜெட்டை இழுத்துவிட்ட அந்த அட்லீ மட்டும் வேணவே வேணாங்க!

0 comments :

Post a Comment

 
Toggle Footer