ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனைவிட 40,707 வாக்குகள் அதிகம் பெற்றார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்களிப்பு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்ற நிலையில், ஆரம்பம் முதலே தினகரன் முன்னணி வகித்து வந்தார்.
18 சுற்றுக்கள் தொடர்ந்த வாக்கு எண்ணும் பணிகளின் இறுதியில் 89,013 வாக்குகள் பெற்று தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இது, அளிக்கப்பட்ட வாக்குகளில் 50.32 வீதமாகும்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
டி.டி.வி.தினகரன் (சுயேட்சை) - 89,013
மதுசூதனன் (அ.தி.மு.க) - 48,306
மருதுகணேஷ் (தி.மு.க.) - 24,581
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,802
கரு. நாகராஜன் (பா.ஜ.க.)- 1,368
நோட்டா- 2,348
Sunday, December 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment