Friday, December 29, 2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். பரணி நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். தானுண்டு வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். 

ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனம் பழுதாகம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்:  கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். 

கடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய பிரச்னைகள் கட்டுக்குள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை கைக்கூடும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியா
பாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கன்னி:  சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

துலாம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புது வேலை அமையும். கடையை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றி பெறும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer