Tuesday, December 26, 2017

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசு வார்கள். பிரபலங்கள் உதவு வார்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப் படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழி யர்களின் ஆதரவு கிட்டும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்:  சந்திராஷ்டமம் நீடிப் பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கன்னி: பிள்ளைகள் பொறுப் பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபா ரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள். 

துலாம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள் வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்க ளால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். 

தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றிபெறும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர் கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச் சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer